Thursday, April 21, 2011

உணர்வுகளுடன்




எமது கிராமத்தின் பிரபல்ய கல்வி நிலையமான A.M.A 19/04/2011 அன்று கல்வி சுற்றுலா ஒன்றை மேற்கொண்டது அது தொடர்பாக அலசுவோம் முதலிலே சோலை மாரியம்மன் எனும் கோவிலுடன் ஆரம்பித்து பின்பு படிப்படியாக எமது சுற்றுலா விரிவடைந்து சென்றது பின்பு மணல் காட்டுக்கு சென்றார்கள் அங்கு பல அனுபவங்களை அவர்கள் பெற்றார்கள் பின்பு ஒவ்வொரு  இடமாக பார்வையிட்டு பின்பு திரும்பினார்கள் (படங்கள்)

அளவையில் இருந்து

அளவெட்டி தனிச் சைவக்கிராமமாக விளங்கிவந்தது. இங்கு அழகொல்லை ஆலயம் ,கும்பிளாவளை பிள்ளையார் ஆலயம்,அம்பாள் ஆலயம் ஆகிய பேராலயங்களும் பத்துக்கு மேற்பட்ட சிறிய ஆலயங்களும் இருந்துவருகின்றன .சிறிய ஆலயங்களில் ஒன்றிரண்டு தவிர ஏனையவை வைரவர் ஆலயங்கள்.


 கண் விழிக்கும் போதே கடவுள் நினைவோடெழுந்து தத்தம் கடமைகளைத் தொடங்குவது நாளாந்த நிகழ்வாகும்.  அயர்ந்து தூங்கியோர் விரைந்து எழுந்ததும் பிள்ளையார் ஆலயமணி கேட்டதா என்றே முதலில் வினவுவர். தினமும் நிகழும் மூன்று நேரப் பூசைகளுக்கும் செல்லும் பக்தர்கள் பலர் இருந்தனர்.வருடாந்த மகோற்சவ காலங்களில் ஊரே திரண்டுவிடும்.வைகாசித் திருநாளில் பிள்ளையார் ஆலயத்திலும் மார்கழித்திருவாதிரை நாளில் அம்பாள் ஆலயத்திலும் மகோற்சவம் இறைவெய்தும்.  அம்பாள் ஆலய மகோற்சவ காலத்தில் நாட்டின் எலாப் பகுதிகளிலிருந்தும் எமது மக்கள் தவறாது வந்து கூடுவர். சித்திரத் தேரில் விநாயகர் பவனிவரும் திருக்கோலக் காட்சியைக் கண்டுகளிக்கும் திருநாளில் பலநூறு மக்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் காட்சி பக்தி பூர்வமாக இருக்கும்.




அழகொல்லை ஆலயம் கடந்த நூற்றாண்டு ஆரம்பத்தின் முன் பின்னாக எமது ஆலயமும் எப்பிடி இருந்து வந்து இன்று 2011ஆம் ஆண்டு தனது மகோற்சவத்தை வெகு விமர்சையாக கொண்டாடி முடித்துள்ளது இதன் போது வெளி நாட்டில் இருந்து கூட மக்கள் வந்து இதனை பார்த்து தமது நேர்த்திகளை முடித்துகொண்டனர் இவ் ஆலயத்தின் தேர் திருவிழா மற்றும் சப்பறம் ,தீர்த்த திருவிழா என்பன சிறப்பாக முடிவடைந்துள்ளது


இந்த ஆலயத்தில் நடை பெற்ற உற்சவங்களை பற்றி அலசுவோம்.கொடி ஏற்றம் என ஆரம்பித்து நடுவிலே வியக்கவைக்கும் திருவிழாக்களுடன் பின்பு கொடி இறக்கத்துடன் முடிவுக்குவந்தது தேர் திருவிழாவின் போது பக்தர்கள் தேர் வடங்களை பிடித்து இழுத்து தமது கோரிக்கைகளை இறைவனிடத்தில் சமர்ப்பித்தனர் இதனை கண்டு கழித்த போது மிகவும் இன்பமான ஒரு இடத்தில நிற்பதை நான் உணர்ந்தேன் மங்கையர் தமது கைகளில் அற்சணை தட்டுகளுடன் நிற்பதை காண கூடியதாக இருந்தது அத்துடன் ஆண்கள் சிலர் பிரதட்டை அடித்து தமது பாவங்களை குறைத்து கொண்டனர் இந்த ஆலயத்தில் தீர்த்த திருவிழாவின்போது பலர் வந்து தமக்கு புண்ணியங்களை உருவாக்கிகிருன்தனர் அன்று இரவு கொடி இறக்கத்துடன் திருவிழா முடிவுக்கு வந்தது பின் மறுநாள் பூங்காவான திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது அதில் மேள கைச்சேரி நடை பெற்றது எனவே இதில் இருந்து ஒளவையாரின் வாக்கு "கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் "என்ற முதுமொழியை நன்கு உணர முடிந்தது

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Justin Bieber, Gold Price in India